அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: காங்கிரஸ் - பிஜேபி - ஆளும் முதலாளி வர்க்கங்களின் முகத்திரைகள் கிழிந்தன.
சனி, 15 பிப்ரவரி, 2014
வெள்ளி, 31 ஜனவரி, 2014
அரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட்சி
பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும்
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.
குழு முரண்பாடே பிளவுக்குக் காரணம்
இந்த அனைத்துக் கட்சிகளுமே பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் உள்ளது என்று நம்பக்கூடியவை. மேலும் இக்கட்சிகள் அனைத்தின் திட்டத்திலுமே நிலச் சீர்திருத்தம் ஒரு மிகமுக்கிய கோரிக்கையாகவும் அது நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு அடிப்படையான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது.
இந்த அடிப்படையான ஒற்றுமையை மனதிற்கொண்டு பார்த்தால் இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும். ஆனாலும் அவை இத்தனை பிரிவுகளாகப் பிரிந்துள்ளது ஒரே ஒரு காரணத்தால் தான். அதாவது அவற்றின் பிளவு அடிப்படை அரசியல் வழியிலோ அதுபோன்ற கோட்பாடு ரீதியான விசயங்களிலோ நடைபெறவில்லை. குழு முரண்பாட்டின் காரணத்தால்தான் இந்தப் பிளவு நிகழ்ந்துள்ளது.
இக்கட்சிகள் அனைத்தின் வழிமுறையிலும் தேசிய முதலாளிகள் ஏதாவது ஒரு வகையில் நேச சக்திகளாக முன் வைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் நடத்தும் போராட்டங்கள் எதிலும் அந்த தேசிய முதலாளிகளாகிய நேசசக்தி ஒருபோதும் கலந்து கொண்டதில்லை.
செவ்வாய், 28 ஜனவரி, 2014
தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்
தற்கொலை செய்துகொள்வதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கும் - பரப்பும் தமிழ் கூறும் நல்லுலகின் இன்றய சூழலில் பகத்சிங்கின் இக்கடிதம் நிச்சயம் நமக்கு ஒரு வழிகாட்டும்.
விசாரணை
என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக்
காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக
காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட
போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு
ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள்
தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது
குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
சுகதேவ்
தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக
எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால்
விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை
என்று அவர் கூறியிருந்தார்.
அக்கடிதத்திற்கு
பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
பாரதியிடம் கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் -1
இன்று இந்திய முதலாளித்துவத்தின் கீழ் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட அதே நிலமையில் இருக்கும் மக்களைத் தட்டியெழுப்பி ஒரு புரட்சியின் மூலம் சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
லேபிள்கள்:
கம்யூனிஸ்ட்,
பாரதி
மகாகவி பாரதி நினைவுநாளை மக்கள் கவிஞர்கள் தினமாக அனுஷ்டிப்போம்
லேபிள்கள்:
பாரதி
திங்கள், 18 மார்ச், 2013
சிவப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசுவதை நிறுத்திக் கொண்டது
இந்திய விடுதலைப் போராட்டத்தின்
போது காங்கிரஸ் இயக்கத்தோடு தங்களை
இணைத்துகொள்ளாது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வங்கத்தில் தீவிரமாகப் போராடிய அனுசிலன்
சமிதி, ஜுகாந்தர்
போன்ற அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைப் போரில் ஒரு உயரிய பங்கினை
வகித்தவரும், விடுதலை பெற்ற பின்பு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் தோழர். சிப்தாஷ்
கோஷ் ஈடுபட்ட போது அவருடன் தோளோடு தோள் கொடுத்து அப்பணியில் ஈடுபட்டவரும், அதன் பின்னர் தோழர். சிப்தாஷ் கோஷ் விரல்விட்டு எண்ணக்கூடிய
சில தோழர்களைக் கொண்டு SUCI ஸ்தாபனத்தை
ஏற்படுத்திய போது அதன் அமைப்புத் தலைவர்களில் ஒருவராகவும், அதன் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கியவரும், தோழர். சிப்தாஷ் கோஷ் மறைவுக்குப்
பின்னர் SUCI கட்சி பெயரளவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப்
பாதையைக் கூறிக்கொண்டு நடைமுறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் - இங்கு
கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும்
பிற கட்சிகளைப் போல் - இந்த மண்ணில்
நிலவும் பிரதான முரண்பாட்டைப் புறக்கணிக்கும் பாதையில் செயல்பட்டு சம்பிரதாய
வாதத்தையும், இயந்திர கதியிலான சிந்தனைப்போக்கையும் கடைப்பிடிக்க ஆரம்பித்த போது
அதிலிருந்து வெளியேறி, CWP (Communist Workers Platform) என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கம்யூனிச சிந்தனை
கொண்டோரை ஒருங்கிணைத்து SUCI கட்சியின் தோல்வியிலிருந்தும்
படிப்பினை எடுத்துக் கொண்டு ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைப்பதற்குரிய
வலுவான அடித்தளத்தை அமைத்தவரும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியுமான,
எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் சங்கர் சிங் அவர்கள் 16.03,2013
அன்று தன் 87 ஆவது வயதில் பாட்னா நகரில் இயற்கை
எய்தினார். அம்மாபெரும் தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறோம். அவர்
பயணித்த பாதையில் உறுதியுடன் பயணித்து அவரது கனவை நனவாக்க உறுதியேற்போம்.
செவ்வாய், 29 ஜனவரி, 2013
An Appeal to the Readers of Progressive and Left Literature
There are
various writings on the Indian left movement as part and parcel of the freedom
movement in India. Almost all those writings are about the activities of the Congress
Party as the frontal organisation of the Indian freedom movement and the unity
and struggle attitude maintained by the left groups with the Congress. On all
occasions when the Congress was in the movement mode the left groups were
united with them and at moments the Congress made compromises with the British
and withdrew movements after striking compromises they differed with it. This
trend and tendency of the Left formed the core of those writings.
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
சீரும் சிறப்புடன் நடைபெற்றது மக்கள் கவிஞர்கள் விழா
ஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி சோஷலிச கலை இலக்கிய மாமன்றம் சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி 23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மக்கள் கவிஞர் விழா நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ பிளாட்பார்ம் அகில இந்திய பொது செயலாளர் தோழர். அ.ஆனந்தன், அருணாசலம், சாமி , தோழர்.செல்வகுமார், தோழர் .சிவகுமார், தோழர். சுரேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட விழா சிறப்புடன் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்



