தற்கொலை செய்துகொள்வதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கும் - பரப்பும் தமிழ் கூறும் நல்லுலகின் இன்றய சூழலில் பகத்சிங்கின் இக்கடிதம் நிச்சயம் நமக்கு ஒரு வழிகாட்டும்.
விசாரணை
என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக்
காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக
காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட
போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு
ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள்
தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது
குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
சுகதேவ்
தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக
எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால்
விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை
என்று அவர் கூறியிருந்தார்.
அக்கடிதத்திற்கு
பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.



