சனி, 18 பிப்ரவரி, 2012

19 .02 .2009 - காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு தீர்வு கிடைக்குமா ?

சென்னை உயர் நீதிமன்றத்தை சாட்டர்டு ஹை கோர்ட் என்று நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் அந்த பெருமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தது தமிழக காவல் துறை. பிப்ரவரி 19 , 2009 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் , நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், கட்சிகாரர்கள், மீடியா ரிப்போர்ட்டர்கள் ஆகிய அனைவரின் மண்டைகளையும் உடைத்தது. காட்டுமிரண்டிதனமாக பலரையும் கொடுங்காயம் ஏற்படும் வகையில் தாக்கியது. நீதிமன்ற வளாகங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் , நூலகங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கி சூறையாடியது. உலக மக்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் பார்க்கவே இந்த அனைத்து அட்டகாசங்களையும் காட்டுமிராண்டிதனமான தமிழக காவல் துறை அரங்கேற்றியது.  

அதை தொடர்ந்து தமிழகம்  முழுவதும் வழக்கறிஞர்கள் ஒரு மாத காலம் கோர்ட் புறக்கணிப்பு , தொடர் உண்ணாவிரதம், மற்றும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள், இறுதியாக 40 ,000  மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள   வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பேரணியும் ,பொதுக்கூட்டமும் சென்னையில் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் அமைத்த கிருஷ்ணா கமிட்டி முழுக்க முழுக்க அரசுக்கு சாதகமான அறிக்கையினை அளித்தது. அதை  வழக்கறிஞர்கள்  நிராகரித்தார்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு காரணமான ராதாகிருஷ்ணன் , .A.K.விஸ்வநாதன் ,ராமசுப்ரமணி , பிரேம்  ஆனந்த்  சின்ஹா ஆகிய காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசோ அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்ததுடன் , உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறவும் உதவி செய்தது.  சென்னை உயர்நீதிமன்ற தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளான வழக்கறிஞர்களுக்கு இன்று வரை எந்த  நீதியும்  கிடைக்கவில்லை. 

பல்வேறு வழக்குகளை நடத்தி அனுதினமும் ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரணம் தேடி தரும் வழக்கறிஞர்கள்  தங்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மூன்று    ஆண்டுகள்  ஆகியும், தங்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு கடை நிலை காவலரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாத அவல நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 19 தேதியை கருப்பு தினமாக அறிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு உட்பட பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் வழக்கறிஞர்கள் இந்த ஆண்டு பிப்ரவரி 19 விடுமுறை தினம் ஆதலால் பிப்ரவரி 17 அன்றே தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பையும் , கண்டன ஊர்வலங்களையும் நடத்த தீர்மானித்தார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட ஊர்வலமும், கருப்பு பேட்ஸ் அணிந்து கண்டன ஆர்ப்பட்டமும் நடைபெற்றது. வெறும் நீதிமன்ற புறக்கணிப்பும் ,நீதிமன்றகளில் நடைபெறக்கூடிய சட்டப்போராடங்கள் மட்டுமே அரசின் அரவணைப்பில் உள்ள உயர்நீதிமன்ற தாக்குதலுக்கு காரணமான காவல் துறையை தண்டிக்க போதாது என்பதை வழக்கறிஞர்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள். 

உறுதியான கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களை முன்வைத்து காலவரையறையற்ற போராட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே வழக்கறிஞர் நீதி போராட்டம் வெற்றியடையும் என்பதே நம் கண் முன் உள்ள நிதர்சனமான உண்மை ஆகும்.


19.02.2009, அன்று காவல் துறை நிகழ்த்திய அட்டகாசங்கள்

1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்