திங்கள், 2 ஏப்ரல், 2012

மார்ச் 23 - தியாகி. பகத்சிங் நினைவு தின கலந்துரையாடல்
சிறப்பு  விருந்தினர் - தோழர். சிவக்குமார் (ஆசிரியர்  - கேளாத செவிகள் கேட்கட்டும்...பகத்சிங் கடிதங்கள் , கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)

கலந்துரையாடல்  நடத்தப்பட்ட தேதி -  மார்ச் 23 ,2012 

நடத்தப்பட்ட இடம் -  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

கலந்துரையாடலில் பகேற்றவர்களின் எண்ணிக்கை - 27

-----------------------------------------------------------------------------------------------------------------------------

விவாதிக்கப்பட்ட கரு:
    பகத்சிங்கின் தியாகம் மற்றும் அவர் முழக்கமிட்ட விடுதலையும், இன்றும் அதன் பொருத்தமும் - பின்பு பகத்சிங் முழங்கிய விடுதலை எவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் (காந்தியடிகளின் வழியாக) முன்னிறுத்திய விடுதலைக்கு அடிப்படையில் மாறுபட்டது - அது (பெரும்பான்மை உடைய) தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே உண்மையான விடுதலை என்ற கருவை கொண்டது. எனவே நம் முன் நிறுத்தப்பட்ட கடமை பகத்சிங் போராடியது போல தொழிலாளி வர்க்க விடுதலையே நம் அனைவருக்குமான  விடுதலை என்ற முழக்கத்துடன் முனைந்து மார்க்சிய வழியில் ஆராய்ந்து நம் சமுதாயக்கடமையை முழு வேகத்துடன் கொண்டு செல்வது தான்.
     கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்விகளின் முலம் நாம் ஒரு கூட்டமைப்பின் உள்ள தனிமனிதர்கள் தமக்குள்ள செய்ய வேண்டிய போராட்டத்தின் அவசியத்தை அறிந்தோம். அதையும் பகத்சிங் மிக அழகாக "Crush your individuality first. Shake off the dream of personal comfort. Then start to work. Inch by Inch you shall have to proceed. It needs courage, perseverance and a very strong determination. No difficulties and no hardship shall discourage you. No failures and betrayals shall dishearten you. Through the ordeal of sufferings and sacrifice you shall come out victorious and these individual victories shall be the valuable assets of the revolution - Bhagath Singh" சொல்லியிருகின்றார். இதன் மூலம் நாம் நம்முள்ளே செய்ய வேண்டிய போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். இதுவே நாம் புரட்சியின்  பாதையில் நம்மை வழிநடத்தி செல்ல முதல் படி.
       இந்த கலந்துரையாடலின் போது நாம் இந்த சமுதாயத்தில் உள்ள பிரதான முரண்பாடுகள் இரண்டும் தொழிலாளர் வர்க்க தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத லாபநோக்க கொள்கையை உடைய முதலாளித்துவ அமைப்பு அது வளர்வதற்கு காரணமான தொழிலாளர் வர்க்கத்தினால் தூக்கி எறியப்படும் (அதாவது - அளவு ரீதியிலான மாற்றம் பண்பு ரீதியிலான மாற்றத்திற்கு வழிவிடும் என்ற அறிவியல் விதியின் படி). இந்த இயக்கம் அறிவியல் சான்றுடையது ஆகையால் புரட்சியை அதன் இயக்கவியல் பாதையில்   இருந்து எவராலும் தடுக்கமுடியாது. பகத்சிங்கின் கொள்கைகளை தற்போது இருக்கும் சக்திகள் இருட்டடிப்பு செய்வதன் மூலம் எவராலும் அவரையும் அவரது கொள்கைகளையும் எளிதில் சிதைத்துவிடமுடியாது. அது தனது காலத்தேவையை பூர்த்தி செய்யாமல் ஓயாது என்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்தது.


- மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்தனை வட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்