மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.
அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.



5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள். இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் , மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.



