இந்திய விடுதலைப் போராட்டத்தின்
போது காங்கிரஸ் இயக்கத்தோடு தங்களை
இணைத்துகொள்ளாது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வங்கத்தில் தீவிரமாகப் போராடிய அனுசிலன்
சமிதி, ஜுகாந்தர்
போன்ற அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைப் போரில் ஒரு உயரிய பங்கினை
வகித்தவரும், விடுதலை பெற்ற பின்பு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் தோழர். சிப்தாஷ்
கோஷ் ஈடுபட்ட போது அவருடன் தோளோடு தோள் கொடுத்து அப்பணியில் ஈடுபட்டவரும், அதன் பின்னர் தோழர். சிப்தாஷ் கோஷ் விரல்விட்டு எண்ணக்கூடிய
சில தோழர்களைக் கொண்டு SUCI ஸ்தாபனத்தை
ஏற்படுத்திய போது அதன் அமைப்புத் தலைவர்களில் ஒருவராகவும், அதன் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கியவரும், தோழர். சிப்தாஷ் கோஷ் மறைவுக்குப்
பின்னர் SUCI கட்சி பெயரளவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப்
பாதையைக் கூறிக்கொண்டு நடைமுறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் - இங்கு
கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும்
பிற கட்சிகளைப் போல் - இந்த மண்ணில்
நிலவும் பிரதான முரண்பாட்டைப் புறக்கணிக்கும் பாதையில் செயல்பட்டு சம்பிரதாய
வாதத்தையும், இயந்திர கதியிலான சிந்தனைப்போக்கையும் கடைப்பிடிக்க ஆரம்பித்த போது
அதிலிருந்து வெளியேறி, CWP (Communist Workers Platform) என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கம்யூனிச சிந்தனை
கொண்டோரை ஒருங்கிணைத்து SUCI கட்சியின் தோல்வியிலிருந்தும்
படிப்பினை எடுத்துக் கொண்டு ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைப்பதற்குரிய
வலுவான அடித்தளத்தை அமைத்தவரும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியுமான,
எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் சங்கர் சிங் அவர்கள் 16.03,2013
அன்று தன் 87 ஆவது வயதில் பாட்னா நகரில் இயற்கை
எய்தினார். அம்மாபெரும் தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறோம். அவர்
பயணித்த பாதையில் உறுதியுடன் பயணித்து அவரது கனவை நனவாக்க உறுதியேற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக