வெள்ளி, 27 ஜனவரி, 2012

முல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்


தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப் படுகிறது. 

தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன. 

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம்.

கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு  கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர்.  இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து  அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை  ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .

மாற்றுக்கருத்து,15 ஜனவரி - 14 மார்ச், 2012

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு


கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அணுஉலையை எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன. 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும்


சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது. 

இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார். 

மேலும் படிக்க


பாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்


சமூகம் சரியானதாக இல்லாவிடில் குடும்பம் சரியானதாக இருக்க முடியாது : இதனை மறுப்பவர்கள் அவர்களையும் அறியாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்து உற்பத்தியாளர்களாவதைத் தவிர்க்க முடியாது

நமது ஊடகங்களில் மிக அதிகம் மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவதாக இருப்பது மின்னணு ஊடகங்கள். அதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு மிக அதிகமாக மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது.  காட்சி ஊடகங்களில் தற்போதைய இளைய தலைமுறை ரசிப்பது பெரும்பாலும் திரைப்படம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளே. ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் சமூகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மிகப் பெரும்பாலும் நடுத்தர வயதினரே. அவர்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஆவர். மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சேராதவர்களாக இருந்தால் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தாக ஆகி வருகிறது. 
மேலும் படிக்க


அவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் முன்னாள் முதல்வரின் கருத்துக்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது. 

அந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை. 


மேலும் படிக்க

மக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்ள தமிழக அரசு



உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த போது நகத்தில் இட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தாங்கொண்ணாச் சுமைகளைத் தமிழக மக்களின் மேல் சுமத்தியுள்ளது. இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவிற்குப் பேருந்துக் கட்டண உயர்வு மிக அதிக அளவிற்கு பால் விலை உயர்வு ஆகிய உயர்வுகளை அறிவித்துள்ளது. வெகு விரைவில் மின் கட்டண உயர்வும் வரும் என்று கூறியுள்ளது. 
காத்திருந்து ஏற்றிய சுமை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவே அரிசி வழங்குவது போன்றவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி ஒரு மக்கள் ஆதரவு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தியது. 

சனி, 14 ஜனவரி, 2012

ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி



திருடன் ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது. 

பி.ஜே.பி. கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது. அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர் வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரினார். 

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...


மாபெரும் ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்ப்பியர் தனது நாடகம் ஒன்றில் கூறினார் இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் வசிப்பவர் அனைவரும் நடிகர்கள் என்று. அவர் ஒரு ஆழமான பொருளுடன் அந்தக் கருத்தைக் கூறினார். அதாவது நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும் வேகம் வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும். அதைப்போல் தான் இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளும் கூட. அவற்றில் முக்கியப் பங்காற்றும் மக்களும் நாடக நடிகர்கள் போல் காட்சிக்குக் காட்சி மாறக்கூடியவர்களே என்று கூறினார். 

ஆனால் அவரது கூற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவார்த்த அம்சத்தை எடுத்துவிட்டு இந்த உலகத்தை ஒரு நாடக மேடை என்று ஒரு மலிவான அர்த்தத்தில் அதாவது கூத்து மேடை என்று பார்த்தால் அதற்கு என்ன பொருளுண்டோ அத்தகைய மேடையாக நமது இந்திய நாடு ஆகிக் கொண்டுள்ளது. அதில் தேர்ந்த கதாபாத்திரங்களாக நமது அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் உள்ளனர். 

மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில் பரிந்துரை குறித்த நமது பார்வை




இந்தியப் பத்திரிக்கைக் கவுன்சிலின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் எழுத்து ஊடகங்களுக்கு எவ்வாறு பத்திரிக்கைக் கவுன்சில் உள்ளதோ அதுபோல் காட்சி ஊடகங்களுக்கும் காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செய்திகளைத் தருவனவாக ஆகிவிட்டன என்று கூறியுள்ளார். 

இதே கருத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். இதனையொட்டி முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பியின் முக்கியத் தலைவர்களான அம்பிகா சோனி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோருடனும் கலந்து ஆலோசனை நடத்தியதாகக் கூறியுள்ளார். 


மேலும் படிக்க

பொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்


பொறியியல் கல்வி பெற்றிருந்தும் வேலையின்றியும் கட்டுபடியான சம்பளமின்றியும் அல்லல்படும் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்
                                                  - இஞ்னியரிங் ஒர்க்கர்ஸ் யூனிட்டி சென்டர் சார்பாக
                                                     தோழர் கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)

தங்களது பிள்ளைகளைப் பொறியியல் கல்வி கற்றவர்களாக ஆக்கிய பெற்றோர் பூரித்திருந்த காலம் என்று ஒன்று இருந்தது. பொறியியல் கல்வி வழங்கிவிட்டால் அப்பிள்ளைகள் குறித்துக் கவலைப்பட ஏதுமில்லை; அவர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக ஆகிவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனால் இன்று பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.

ஒருபுறம் கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் பல மடங்கு ஆகிவிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வருபவர்களில் ஒரு 10 சதவிகிதம் பேர் லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர்களாகவும் மீதமுள்ளோர் அனைவரும் உடல் உழைப்பு செய்வோரைக் காட்டிலும் குறைந்த ஊதியம் பெறுவோராகவும் ஆகியுள்ள அவலநிலை தோன்றியுள்ளது.

மேலும் படிக்க

94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்



இந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும் முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர். 

தேனி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது. 


மேலும் படிக்க

போராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்

தொழிலாளர் உரிமைக்குரல் வெளியில் வராவண்ணம் குரல்வளை நெறிபடும் சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வளர்ந்துவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்





நமது நாட்டின் தொழிலாளர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலவுவது ஒரு இருண்டகாலமே. உலகமயம் நிலவும் இன்றைய சூழலில் அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம் என்ற பெயரில் விஷேசப் பொருளாதார மண்டலங்கள் என்று மண்டலங்களை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன. 

அவற்றிற்குப் பல்வேறு விஷேசச் சலுகைகள் மற்றும் உரிமைகளையும் அரசு வழங்கிவருகிறது. இச்சூழலில் தொழிலாளர் இயக்கங்கள் அரசால் நேரடியாகவும் அரசியல் கட்சிகளால் மறைமுகமாகவும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.


வெள்ளி, 13 ஜனவரி, 2012

தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு

உழைக்கும் வர்க்க அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்

கடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது. 

புரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம் பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு  தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல. இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும். 

புதன், 11 ஜனவரி, 2012

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் (CWP )சில முக்கிய வெளியீடுகள்


கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)  சில முக்கிய வெளியீடுகளை கொண்டு வந்துள்ளது. அவை:
1 . International and National situation
2 . Our Dirrerences - some Points of differences with the present leadership of S.U.C.I. discussed
3 . எஸ்.யு.சி.ஐ யுடனான - நமது கருத்து வேறுபாடுகள் 
4 . Regaining Lost kernel of Marxism - A Brief Outline of SHIBDAS GHOSH THOUGHT - BY Shankar Singh
 5 . Kashmir - The issue at the Root -by Shankar singh
6 .ஆடுகோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்
7. முல்லை -பெரியாறு அணைப்பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் 
சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்


 இந்த வெளியீடுகள் தேவைப்படுவோர் 9843464246 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நேரிலோ , தபால் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

நினைவில் நிற்கும் மனிதர்கள் - எஸ்.எஸ்.கண்ணன்


சமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை அப்பாதையில் செல்லவிடாமல் அதிகபட்சம் தடுத்து விடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்ததாக ஒருவரால் கூறப்பட்ட நிகழ்ச்சியைக் கேட்டபோது அப்பாடா இது போன்ற நிலை எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கவில்லை என்ற மனதிற்கு இதமான ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு தந்தை தன் மகனுக்கு கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தும் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்திற்கு அவனை படிக்க அனுப்புகிறார்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சென்னை புத்தகக் கண்காட்சியில் -பகத் சிங் புத்தகம்



35 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் 05 .01 .2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது  இது 17 .01 .2012 வரை நடைபெற உள்ளது . இந்த புத்தகக்  கண்காட்சி வேலை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நெம்புகோல் பதிப்பகத்தின் வெளியீடான தோழர் 
த.சிவகுமார் எழுதிய கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்  கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் ( விலை ரூ.150 /- ), புத்தகம் 
எதிர் வெளியீடு, அலைகள், கீழைக்காற்று, உயிர்மை  ஆகிய   புத்தக 
அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகத்திற்கு பத்து 
சதவிகித கழிவு உண்டு. இந்தியாவில் முதல் கம்யூனிஸ்டான தோழர்.பகத்சிங் 
பற்றி அவரின் எழுத்துகளிலையே படித்து புரிந்து கொள்ள இந்த புத்தகம் 
நிச்சயம்  உதவும். 

தானே புயலினால் வந்த பாதிப்புகள் அனைத்தும் மக்களுக்கு , நிவாரணம் யாருக்கு ?



சமீபத்தில் அடித்த தானே புயலினால் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் ,பாண்டிசேரி யூனியன் , மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளும் பலத்த பாதிப்பிற்கு  உள்ளானது. மனித உயர் இழப்புகளும் , மீனவர்களின் குடிசைகளும், மீன்பிடி கருவிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின .விளைச்சலை தாங்கி அறுவடையை எதிர்பார்த்த நின்ற நெற்பயிர்கள் மட்டுமல்ல அடித்த சூறைக்காற்றில் மரங்களும் சாய்ந்து விழுந்தன. வீடுகளை புயல் பந்தாடியது, இதில் ஏழை மக்கள் குடியிருந்த குடிசைகளில் ஓன்று கூட மிஞ்ச வில்லை. புயலினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் வீடுழந்து, புயலினால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலையும்  இல்லமால், மின்சார ஒயர்கள் அனைத்தும் அறுந்து விட்டதால் மின்சாரமும் இல்லாமல், குடிக்க தண்ணீரும் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

பணம் , பணம் , பணம் = மருத்துவர்கள்


தென்  அமெரிக்காவை சேர்ந்த எர்னஸ்ட் என்ற மருத்துவ மாணவர் தொழு நோய் சம்பந்தமாக சில ஆய்வுகளை செய்யவும், அந்த கொடிய நோயால் பீடிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடும் தனது நண்பரோடு தென் அமெரிக்க முழுவதும் பயணம் செய்தார். அப்போது தான் தொழு நோயை விட கொடிய நோயான முதலாளித்துவம்  இந்த உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது, அந்த நோயை முதலில் விரட்ட வேண்டும் என்று உறுதி ஏற்றார். தனது வாழ் நாள் முழுவதும் முதலாளித்துவத்திற்கும்,  ஏகாதிபத்தியத்திற்கும்   எதிராக துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இருந்தவர்  தான்  தோழர்.எர்னஸ்ட் சேகுவேரா. அவர் தான்  இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் மனதில் உள்ள புரட்சிக்கான குறியீடு. 

வியாழன், 5 ஜனவரி, 2012

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம்: இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் கருத்தோட்டம் உடையவர்கள் பார்க்கும் முறையும் பார்க்க வேண்டிய விதமும்

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய இயக்கம் பல்வேறு உண்ணாவிரதம், கைது நடவடிக்கை, சிறையில் உண்ணாவிரதம், லோக்பால் கொண்டுவர ஒப்புதல், அரசின் லோக்பால் சட்டத்தின் மீது ஒப்புதலின்மை, மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு என்ற பல பரிமாணங்களில் தொடர்ந்து இறுதியில் வலுவான லோக்பால் மசோதா என்பது போய் வலுவற்ற அரசின் மசோதா கூட நிறைவேறாத நிலையில் தோல்வியைத் தழுவியுள்ளது. 
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத்தை தோல்வியுறச் செய்ததில் ஆளும் வர்க்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்திற்கு இந்த விஷயத்தில் மிகக் கேவலமாக குற்றேவல் புரிந்த சி.பி.ஐ.,சி.பி.எம். மற்றும் தீக்கம்யூனிஸ்டுகள் என்று காட்டிக் கொள்ளும் அதிதீவிரக் கம்யூனிஸ்டுகளும்தான். 

அன்னா ஹசாரேயின்  இயக்கம் குறித்த நமது கட்சிகளின் அணுகுமுறைகள் அடிப்படையில் இரண்டு போக்குகளைக் கொண்டிருந்தன.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

மார்க்சியத்திற்கெதிரான அவதூறுகளை முறியடிப்போம்!, தோழர் சங்கர் சிங்கின் கரங்களை வலுப்படுத்துவோம்!


சுதந்திரப்போராட்ட வீரராகவும், எஸ்யுசிஐ அமைப்பினை நிறுவுவதில் தோழர்.சிப்தாஸ் கோஷ் அவர்களோடு உறுதுணையாக இருந்தவரும், பின்னாளில் சிப்தாஸ் கோஷ் அவர்களின் மறைவிற்கு பின்பு எஸ்யுசிஐ யின் தலைமை திருத்தல்வாத போக்கில் பயணித்த போது அதை கண்டித்து போர் குரல் எழுப்பியவரும்,  எஸ்யுசிஐயில் ஜனநாயக தன்மை இல்லாமல் போனதால் அதிலிருந்து வெளியேறி ,  உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் கொண்டு வர விரும்பிய தோழர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை நிறுவியவரும் அதன் தலைவராக 84 வயதிலும் தளராமல் செயல்பட்டு வருபவருமான  தோழர் சங்கர் சிங் அவர்கள் நவம்பர் தினத்தினை ஒட்டி 'மார்க்சியத்திற்கெதிரான அவதூறுகளை முறியடிப்போம், கம்யூனிஸ்ட் இயக்கங்களை வளர்த்தெடுப்போம்' என்ற தலைப்பில் இந்திய முழுவதும் சென்று மார்க்சிய வகுப்புகளை எடுத்து வருகிறார் . 

முகப்பு

புதிய பதிவுகள்